திருமண விழாவுக்குச் செல்பவர்கள் புதுமணத் தம்ப திகளைப் பார்த்து, "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு சேர்ந்தே நன்கு வாழவேண்டும்', "எப்போதும் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழவேண்டும்' என வாழ்த்துவார்கள்.
திருமணத்திற்குமுன் நட்சத்திரப் பொருத்தம், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து தான் திருமணம் முடிவாகி நடக்கிறது.
ஆயினும் இந்த ஜோடிகள் மிக ஒற்றுமையாக, எப்போதும் மகிழ்ச்சித் துள்ளலுடன் இருக்கிறார்களா என்றால், எல்லாம் ஒரு மூன்று மாதங்களுக்குதான். பிறகு, அவர்களும் சம்சார சாகரம் எனும் பெரும் வளையத் துக்குள் அகப்பட்டுக்கொண்டு, இது சரியில்லை- அது சரியில்லையென்று மூக்கை சிந்துகிறார்கள். இது ஏன்? ஜோதிடம் திருமணம் என்ற பந்தத்தைக் குறிக்க ஏழாமிடத்தைக் குறிகாட்டுகிறது. ஏழாமிடம் என்பது லக்னத்துக்கு நேர் எதிரான இடம். அதாவது உங்களுக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டவர்தான் உங்கள் இல்வாழ்க்கைத் துணைவர் என்று ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது. நம்முடைய "ஆப்போசிட் பார்ட்டி'தான் நமக்குப் பக்கத்தில் வந்து, நிற்கப் போகிறது என்று ஜோதிடம் கூறிவிட்டது. இது புரியாமல், கல்யாண மானபிறகு புலம்பி என்ன பயன்?
எனவே, திருமணம் என்ற ஒரு சம்பவம் நடக்கும் போது, நேரெதிர் ஜாதகரை வைத்துக் காலம் கழிக்கப் போகிறோம் என்றுணர்ந்து மனதளவில் தயாராக வேண்டியது அவசியம்.
இவ்வாறு மனம் சமநிலை பெற்றுவிட்டால், திருமண வாழ்க்கை ஓஹோதான். இந்த இடத்தில் ஒன்று தோன்றும். "நாங்க என்ன சந்நியாசமா வாங்கப் போறோம்?' என்று நினைக்கலாம். சந்நியாச வாழ்க்கை யெல்லாம் ரொம்ப சுலபம். கல்யாண வாழ்க்கைதான் சிரமம். அனுபவித்தவர்களுக்குப் புரியும்.
இப்படி மனம் அதிகம் எதிர்பார்க்காமல் இருந்தால் திருமண வாழ்க்கை எவ்வித சச்சரவுமின்றி மென்மை யாக ஓடும்.
இதுபோல, லக்னம் தவிர, மற்ற பாவங்களை என்னவித மாகக் கையாளவேண்டும் என்று பார்க்கலாம். 12 பாவங் களும் இணைந்ததுதானே வாழ்க்கை.
2-ஆம் பாவகம்
இரண்டாம் பாவகத்துக்கென்று இருநூறு காரகப் பலன்கள் உண்டு. ஆனால் திருமணமென்று வரும்போது அத்திருமணம் மனநெரிசலின்றிச் செல்ல இரண்டாம் பாவகநிலை என்ன? திருமணப் பிரச்சினைகள் வர முதல் காரணமே பேச்சு பேச்சு பேச்சுத்தான். (பேசிப்பேசியே நிச்சயத்துடன் நின்ற கல்யாணங்கள் உண்டு). ஆக, இந்த 2-ஆமிடத்தை வைத்து, இந்த தம்பதிகள் நிதான மாகப் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட வேண்டும்.
அடுத்து பணவிஷயம். சில மனை விகள், "இவன் என்னைவிட குறைந்த சம்பளம் வாங்குகிறான்' என்றோ, சில கணவர்கள் "மனைவி வழியில் வரும்படி வரவில்லை' என்றோ மனச்சுணக்கம் கொள்கின்றனர்.
இதையெல்லாம் வீட்டின் பெரிய வர்களோ அல்லது சம்பந்தப்பட்ட தம்பதி களோ சேர்ந்துபேசி, முதலிலேயே தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். இதனால் மணவாழ்வு சீராகச் செல்லும்.
2-ஆமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப் பலன்கள்:
சூரியன்- கோபமான வார்த்தைகள்.
சந்திரன்- எளிதில் திருப்தியடையாதவர்.
செவ்வாய்- மடத்தனம், மட்டமான பேச்சு.
புதன்- கோமாளித்தனமான பேச்சு.
சுக்கிரன்- செல்வக்குறைவு.
குரு- முட்டாள், குறைவான வசதி வாய்ப்பு.
சனி- கஞ்சத்தனம், பிறர் செல்வத்துக்கு ஆசை.
ராகு- வெளிநாட்டுப்பணம், எதிர்மறை சிந்தனை, குதர்க்கமான பேச்சு.
கேது- சந்தேகப் பேச்சு.
3-ஆம் பாவகம்
பொதுவாக 3-ஆம் பாவகம் இளைய சகோதரம், காது, பயணம், வீரம், வீரியம் எனக் குறிப்பிடும். திருமண வாழ்வு நீடித்து நிலைக்க 3-ஆம் பாவகத்தின் வீரம், வீரியம் என இரண்டை எடுத்துக்கொண்டால் போதும். முக்கியமாக ஆண்களுக்கு இது வீரிய ஸ்தானம்.
இந்த 3-ஆம் அதிபதி நீசம், அஸ்தமனம் அடைந் தாலோ, 6, 8, 12-ல் மறைந்தாலோ, அம்சத்தில் நீசமடைந்தாலோ, சனி, புதன் வீட்டில் அல்லது அம்சத்தில் அமைந்தாலோ என ஏதாவது ஒருவகையில் வலிமை குன்றியிருந்தால், இவ்வகை ஆண்கள், மருத்துவரிடம் ஆலோ சனை பெற்று, அவர் தகுதிச் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வது நலம். மீறித் திருமணம் நடந்தால் திருமண வாழ்வு நீடிக்காது.
பெண்களுக்கு, இதற்கு மாறாக 3-ஆம் அதிபதி உச்சம் பெற்றோ, வலிமையான பாவர் சேர்க்கை பெற்றோ இருந்தால், அந்தப் பெண்கள் சற்று மூர்க்கமாக, கை ஓங்கும் அளவுக்கு நடந்துகொள்வர். இந்தப் பெண் களின் 3-ஆம் அதிபதிக்கான தெய்வத்தை வணங்கும்போது, இவர்களின் அதீத ஆற்றல் குடும்பத் தலைமையேற்றல், கணவரின் தொழில் நிர்வாகத்தில் பங்கு பெறுதல், நிறைய அலுவலகங்களில் தலைமைப் பொறுப் பேற்றல் எனும் நிலை ஏற்பட்டு மேன்மைத் தன்மையில் பயனடையும். அதிக ஆற்றலை நேர்வழியில் திருப்பிவிட முயற்சிக்கவும். மணவாழ்வு ஓஹோதான்.
4-ஆம் பாவகம்
பொதுவாக ஜோதிடம் 4-ஆமிடத்தை தாய், வீடு, வாகனம், கல்வி என பலவிதப் பயன்களை எடுத்துரைக்கும். எனினும் திருமணத்தின் நீடித்த வாழ்வினைக் குறிக்கும்போது, சௌக்கியம், சிநேகம், சுகம், வாழும் சூழ்நிலை, பற்று, அந்தரங்க வாழ்க்கை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாகவே 4-ஆமிடத்தை சுகஸ்தானம் என்றே குறிப்பிடுவர். எனவே இருவரது 4-ஆமிடமும் சுபத்தன்மை பெற்றிருந்தால் திருமண வாழ்வு சௌக்கியமாகச் செல்லும். 4-ஆமிடம் சற்று பலமிழந்தால் கல்யாணக் களை சற்றே குறையும். 4-ஆமிடத்திலுள்ள கிரகங்களும், 4-ஆம் அதிபதியும் திருமண வாழ்வில் எவ்விதம் சுகக்கேடு உண்டாகும்- வாழும் சூழ்நிலைக்கு இடர்ப்பாடு எவ்வி தம் ஏற்படும் என உரைப்பர். இதனை திருமணப் பொருத்தம் பார்க்கும் ஜோதிடர் கள் தெளிவுபட உரைத்துவிட்டால் மணமக் கள் மனதளவில் தயாராகிவிடுவர். இதனால் திருமண வாழ்வில் சிறுசிறு சலசலப்பு, பிரச்சினை ஏற்பட்டாலும், "நம்ம ஜாத கத்துக்கு இவ்வாறுதான் நடக்கும். எனவே சமாளித்துக் கொள்ளலாம்' என்று மனதளவில் தயாராக இருப்பர்.
4-ஆமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப்பலன்கள்:
சந்திரன்- தாய் விஷயமாக இடர்ப்பாடு.
சூரியன்- உடல்நிலை குறைபாடு.
செவ்வாய்- சொந்த பூமி இல்லாதவர்.
புதன்- கல்வி குறைபாடுள்ளவர், வாழ்வில் பற்றற்றவர்.
சுக்கிரன்- வாழ்க்கை வசதிக்குறைவு.
குரு- அசையா சொத்து இல்லாதவர்.
சனி- வாழ்க்கையில் பற்றில்லாதவர்.
இவ்வாறாக, 4-ஆமிட சம்பந்த கிரகங்கள் வலிமைகுன்றி அல்லது அசுபத்தன்மை பெற்று அமர்ந்திருந்தால், மேற்படி குறைகளால் சுக சௌகர்யம் சற்று பின்னடையும்.
அவரவர் ஜாதகத்தின்மூலம் இதனைத் தெரிந்துகொண்டு, அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் இக்குறைகள் மறைவதோடு, மணவாழ்வும் தடையின்றி மலர்ச்சி பெறும்.
5-ஆம் பாவகம்
ஜோதிடம் 5-ஆம் பாவகத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம், குழந்தைகள் ஸ்தானம் என பலவாறாகக் கூறினாலும், ஒரு திருமணத் தின் நீடித்த நிலைப்பாட்டிற்கு- தன் வாழ்க் கைத் துணைமீது கொள்ளும் அன்பு, பாசம், நம்பிக்கை, பெருந்தன்மை, காதல், இனிய பொழுதாகக் கழித்தல், ஆரோக்கியமாக இருத்தல், உறவைப் பேணிக்காத்தல் என இவை போன்ற செய்திகளை 5-ஆமிடம் அறிவிக்கும். இந்த 5-ஆமிடம், 5-ஆம் அதிபதி தம்பதிகள் இருவருக்கும் நன்கு அமைந்துவிட்டால், ஒருவருக்கொருவர் காதலுடனும், அன்புடனும் நடந்து கொள்வர். இல்லறப் பிணைப்பு நன்கு இறுகி ஒரு கட்டுக்குள் இருக்கும். இந்த நல்ல புரிதல் இவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியத்தையும் கொடுத்துவிடும்.
அதுவல்லாது, 5-ஆமிடம் ஒருவருக்கு பலமாகவும், மற்றவருக்கு பலமற்றும் இருப்பின் பாசம், அன்பு எல்லாம் "ஒன் வே டிராஃபிக்' ஆக அமைந்துவிடும்.
அடுத்தவரோ, எதிலும் பிடிப்பற்றவராக, அலட்சியமாக நடந்துகொள்வார். அன்பும், பாசமும் நிராகரிக்கப்படும்போது எங்கிருந்து குழந்தை பிறக்கும்? ஒரு திருமண வாழ்வு சிறப்பாக நிலைபெற 5-ஆமிட பலம் மிக அவசியம்.
இந்த கட்டுரை பெரும்பாலும் சின்னஞ் சிறுசுகளுக்கான செய்திதான். தம்பதிகள் அன்யோன்யமாக இருப்பின், அதனை ஊருக் கெல்லாம் தம்பட்டம் அடிக்கக்கூடாது. அன்பு, பாசம் அடக்கமாக இருக்கட்டும். இல்லாவிடில் திருஷ்டி ஏற்பட்டு சண்டை வந்துவிடக்கூடும்.
5-ஆமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப் பலன்கள்
சூரியன்- ஆரோக்கியக் குறைவு, பருத்த தேகம், அன்பில்லாதவர்.
சந்திரன்- நிறைய மனக்குழப்பம் ஏற்படும்.
செவ்வாய்- அன்பு, பாசம் எல்லாம் முரட்டுத்தனமாக- முட்டாள்தனமாக இருக்கும்.
புதன்- பைத்தியக்காரத்தனமான அன்பு, சுயநலம்.
குரு- "தான்' என்கிற ஈகோ நிறைய இருக்கும்.
சுக்கிரன்- அனைவரிடமும் அன்பு- அதுவே மைனஸ்.
சனி- மனைவியிடம் அன்பு செலுத்தக்கூட சோம்பேறித்தனப் படுவார்.
6-ஆம் பாவகம்
ஜோதிடம் 6-ஆம் பாவகத்தை பொதுவாக நோய், எதிரி, கடன் ஸ்தானம் என்றே கூறும். ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் கெடுதல் தருமோ, அவற்றையெல்லாம் இந்த 6-ஆம் பாவம் குறிப்பிடும். நீடித்த திருமணத்திற்கும் இது பொருந்தும். திருமணமானவுடன் எல்லாரும் தேனிலவு போகும்போது, சில தம்பதி மட்டும் மருத்துவமனை போனால் நன்றாகவா இருக்கும். அல்லது கல்யாணமான வுடன் கடன்காரன் வந்து நிற்க, "உன் வளை யலை கழட்டித்தா' என்றால் அந்த திருமணம் எங்கிருந்து நிலைக்கும்? இந்தமாதிரி உடல், மனம் சார்ந்த துன்பங்களை 6-ஆமிடம் சுட்டிக் காட்டும். இதே 6-ஆமிடம் வாழ்க்கைத் துணையின் வேலை செய்யும் விதத்தையும் தெரிவிக்கும்.
எனவே, தம்பதிகள் இருவரின் 6-ஆமிடத்தை யும் நன்கு ஆய்வுசெய்தல் அவசியம். 6-ஆமிடத்தில் எந்த கிரகம்- அது சுபம், அசுபம் என எதுவாக இருப்பினும், அதன் தசை திருமணமானவுடன் தொடங்குகிறதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6-ஆமிடம் பாதிப்பு தருவதுபோல் இருப்பின், அதற்குரிய பரிகாரம் செய்தல் அவசியம். 6-ஆமிடம் என்பது திருட்டுத் தனத்தையும், கஞ்சத்தனத்தையும்கூட குறிப் பிடும். வாழ்க்கைத்துணையின் 6-ஆமிடத்தைக் கொண்டு, அவரின் உள்குத்து வேலைகளை ஓரளவுக்கு முதலிலேயே கண்டுபிடித்து, சுதாரிப்பாக இருக்கலாம்.
7-ஆம் பாவகம்
லக்னாதிபதி, ராசியாதிபதி, லக்னம், ராசி ஆகிய ஏதோ ஒன்றுடன் 7-ஆம் அதிபதி சம்பந்தம் இருத்தல் அவசியம். அது பார்வை, சேர்க்கை, சார சம்பந்தமாகவும் இருக்கலாம். இப்படி இருந்தால்தான் ஒருவருக்குத் திருமணமே ஆகும். 7-ஆமிடம் திருமணம், வியாபாரம், வெளிநாட்டுத் தொடர்பு என பல விஷயங்களைக் கூறினாலும், ஒரு திருமணம் நிறைவாக- நிலையாக இருப்பதற்கு ஒரே காரணம், இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் எவ்வாறு நடந்துகொள்வர் என்பதைக் குறிக்குமிடம். ஆக, இந்த 7-ஆமிடம், 7-ஆம் அதிபதியைக்கொண்டு ஒருவர் வாழ்க்கைத் துணையிடம் அன்பாக- சமமாக நடந்துகொள்வாரா- மட்டம் தட்டிக் கொண்டே இருப்பாரா- மதிக்கவே மதிக் காமல் காலில் போட்டு மிதிப்பாரா- அவமரி யாதையாக நடத்துவாரா என்றெல்லாம் கண்டுபிடிக்கலாம். ஜாதகத்தை ஆராய்ந்து, ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ, "உங்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை சற்று கோளாறான குணமுடையவராக இருப்பார்; நீங்கள்தான் மனதளவில் தயாராக இருக்கவேண்டும்' எனக் கூறிவிட்டால், மணவிலக்கு தவிர்க்கப்பட்டு, மணவாழ்வு நீடிக்கும். 7-ஆமிட சம்பந்தம் பெற்ற எந்த கிரகமானாலும், வலுக் குறைந்திருப்பின் மேற்கண்ட நிலை ஏற்படும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 61845